விக்ரம் படத்தில் நயன்தாராவின் பட வில்லன்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம். தற்போது இவரது நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை நடிகர் கமல் தயாரித்துள்ளார். இதனை தொடர்ந்து ‘மகாவீர் கர்ணா’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனேவே நயன்தாராவின் ‘இமைக்க நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.