விஜய்க்கும் அஜித்துக்கும் ஒரு வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்
தளபதி விஜய் நடித்த புலி படத்தைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார். இன்று நடைபெற்ற வெண்ணிலா கபடிகுழு2 படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் அனல் பறக்கப் பேசினார். விழாவில் அவர், “ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர் கபடி டீம்களுக்கு பான்சர் பண்ண வேண்டும். இது நம் மண்ணின் பாரம்பரிய விளையாட்டு. இதைக் கட்டிக் காக்கவேண்டும். பெரிய நடிகர்கள் பந்தா மட்டும் பண்ணக்கூடாது. தமிழர்களின் பாரம்பரியமான கபடி விளையாட்டையும் காப்பாற்ற வேண்டும் ஜல்லிக்கட்டை காப்பாற்றியது போல் இந்த கபடி விளையாட்டில் காப்பாற்ற வேண்டும். மக்களுக்குத் தேவையானதைச் செய்யவேண்டும்” என்றார். மேலும் வெண்ணிலா கபடிகுழு படத்தைப் பற்றி அவர் சொல்லும் போது, “வெண்ணிலா கபடிகுழு படம் பெரிய சரித்திரம் படைத்தது. அதேபோல் இந்தப்படமும் சரித்திரம் படைக்கும். படத்தில் விக்ராந்த் உள்பட அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.” என்றார். தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் திருநெல்வேலியில் ஒரு கபடி டீமை பான்சர் செய்து எடுத்துள்ளார் என்பது கூடுதல் தகவல். விக்ராந்த் சூரி உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை செல்வசேகரன் இயக்கியுள்ளார்