விஜய்சேதுபதிக்கு இது தேவை இல்லாத வேலை ? கலாய்க்கும் அவெஞ்சர்ஸ் ரசிகர்கள்

மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் தனது சூப்பர் ஹீரோக்களை ஒட்டு மொத்தமாக நடிக்க வைத்து தயாரித்துள்ள படம் தான் அவெஞ்சர்ஸ் என்ட் கேம்.

இதன் இறுதி பாகமான எண்ட் கேம் என்ற திரைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்த படத்திற்கு தமிழ் படங்களை விட பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது.

தமிழ் டப்பிங் வசனத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் எழுத, இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் ஆன்தம் பாடலை உருவாக்கியிருந்தார்.

மேலும் அயன்மேன் கேரக்டருக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருந்தார். பிளாக் விடோ கேரக்டருக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று படம் பார்த்த பலர் விஜய்சேதுபதி வாய்ஸ் சரியாக பொருந்தவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்

இந்த திரைப்படத்தில் அயன்மேன் கேரக்டர் இறந்து விடுகிறது. அதற்கு காரணம் விஜய் சேதுபதியின் வாய்ஸ் தான் என்றும் கிண்டல் செய்து மீம்ஸ்கள் போட்டு வருகின்றனர்.