விஜய்யின் ‘தளபதி 64’ படம் குறித்த புதிய தகவல்

நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் தனது 64வது படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. பல கதைகளை கேட்டு தட்டிக்கழித்து வந்த விஜய், லோகேஷ் கனகராஜ் கதை கூறியதும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் கூறிய கதை நடிகர் விஜய் இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து வித்தியாசமான கதைக்களத்தை கொண்டுள்ளதாகவும், அதனால் அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.