விஜய் சேதுபதிக்கும் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை-அமலாபால்

இயக்குநர்  வெங்கட கிருஷ்ண ரோகநாத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் பழனியில் தொடங்கி நடந்து வருகிறது.இதனிடையே,  தயாரிப்பு நிறுவனம் அமலா பாலை நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில்,  இது  குறித்து அமலா பால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து நானாக விலகவில்லை. என்னிடம் ஆலோசிக்காமலே படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். இப்படத்திற்காக நான் மும்பையில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தேன். திடீரென நான் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் எனக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பினார். ஆடை படத்தின் டீசரை பார்த்தபிறகு தான் தன்னை படத்திலிருந்து நீக்கியிருப்பார்கள் என சந்தேகிக்கிறேன். விஜய் சேதுபதி மீது தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை, தற்போதும் நான் அவரது ரசிகை” என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.