விஜய் சேதுபதிக்கு எதிராக திரண்ட ‘அவெஞ்சர்ஸ்’ ரசிகர்கள்

மார்வல் தொடரில் நிறைவுப் படமாக தயாராகியிருக்கும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. இந்த படம் உலக அளவில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 26ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் வரும் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு விஜய் சேதுபதியின் குரல் இந்த கதாபத்திரத்திக்கு பொருந்தவில்லை எனவும், முந்தைய ‘அவெஞ்சர்ஸ்’ படங்களுக்கு குரல் கொடுத்தவரையே மீண்டும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.