விஜய் சேதுபதியின் கெட்டப் வெளியானது…?

தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் சரித்திர படம் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’. இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.

‘KONIDELA புரொடக்ஷன் கம்பெனி’ நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் பிரம்மாண்டமாக தயாரித்து வரும்,இப்படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி,அமிதாப் பச்சன்,ஜெகபதி பாபு,சுதீப்,நயன்தாரா,தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர்.சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,தற்போது படப்பிடிப்பு தளத்தில் சுதீப்பும்,விஜய் சேதுபதியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இப்படத்தில் விஜய் சேதுபதி ஓயாயா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.