விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு

இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். முதன்முறையாக இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், தற்போது காரைக்குடியில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது இறுதி நாள் ஷூட்டிங்கின் போது படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.