விஜய் சேதுபதி . தனுஷ் நடித்த இரண்டு படங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ’சிந்துபாத்’ திரைபடமும், தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படமும் உருவாகியுள்ளது.
இந்த இரண்டு படங்களையும் கேப்டன் என்ற நிறுவனத்தின் சார்பில் ராஜராஜன் என்பவர் வெளியிட இருந்தார்.
முன்னதாக இவர் ‘பாகுபலி 2’ படத்தினை தமிழ்நாட்டில் வெளியிட்டார். அப்போது ‘பாகுபலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூபாய் 17 கோடி ரூபாய் பணத்தை கேப்டன் நிறுவனம் வழங்கவில்லை.
என கூறப்படுகிறது. இதனையடுத்து ‘சிந்துபாத்’ ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரண்டு படங்களுக்கு தடைவிதிக்கக் கோரி பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில், இரண்டு படங்களையும் வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.