விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு புதிய சிக்கல்

‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சி வருகின்ற 23ம் தேதி முதல் துவங்கவுள்ள நிலையில் “பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கவர்ச்சியான உடை அணிந்து வருகின்றனர். நிகழ்ச்சியில் இரட்டை அர்த்தமுடைய வசனங்கள் பேசப்படுகிறது. இது இளைஞர்களையும், பார்வையாளர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது. தணிக்கை சான்று பெறாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப கூடாது” என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.