விஜய் நடிப்பில் ‘பிகில்’ கதை திருட்டு வழக்கினை ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்

இயக்குனர் அட்லீ – நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் உரிமையியல் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.