விஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு சம்பவம் என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறும்போது, நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள். சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்றார்.
Related posts:
நடன இயக்குனர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் சம்பவம்
இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி” திரைப்படத்தின் உரிமைகளை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வாங்கியிருக்கிறது
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மைக்கேல்’
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தின் அப்டேட் .*
மீண்டும் விஜயுடன் இணையும் வில்லன் நடிகர்*
நடிகர் சீயான் விக்ரம் இயக்குனர் பா. ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’!!
தளபதி 64′ படத்தின் இயக்குனர் இவரா⁉
அந்த கதையை நிராகரித்தாரா தளபதி விஜய்…? கடுப்பில் ரசிகர்கள்!
நடிகர் சந்தீப் கிஷன் நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியுடன் இணையும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

