விஜய் பட ரீமேக்கில் அக்‌ஷய்குமார்

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அக்‌ஷய்குமார். இவர் ரஜினிகாந்துடன் ‘2.0’ படத்தில் நடித்திருந்தார். மேலும் ‘காஞ்சனா’ மற்றும் ‘வீரம்’ படங்களின் இந்தி ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்துக்கு ’இக்கா’ என தலைப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.