விஜய் ரசிகர்களை வாழ்த்திய நகைச்சுவை பிரபலம்
‘பிகில்’ படத்தின் பெயரில் தளபதி விஜய் மக்கள் பேரவை சார்பில் விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் மரங்களை நட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து மரம் மண்ணின் வரம்! மரம் வளர்ப்பதே மனித அறம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ள விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு விஜய்யின் ரசிகப் பெருமக்கள் மரம் நடுவதில் முனைப்புடன் செயல்படுவது ஆரோக்கியமான ஆரம்பம்! இது இத்துடன் நிற்றல் கூடாது. தொடர வேண்டும்” என வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
அன்பு விஜய்யின் ரசிகப் பெருமக்கள் மரம் நடுவதில் முனைப்புடன் செயல்படுவது ஆரோக்கியமான ஆரம்பம்! இது இத்துடன் நிற்றல் கூடாது. தொடர வேண்டும்! வாழ்த்துக்கள் 👏🏻
— Vivekh actor (@Actor_Vivek) August 15, 2019