வினோத நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி

ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் குருலெட்சுமி தனது மகன் சூர்யாவின் மருத்துவ உதவிக்காக ராகவா லாரன்ஸை தேடிசென்னை வந்துள்ளனர். ஆனால், சென்னை வந்த அவர்களுக்கு ராகவா லாரன்ஸ் முகவரி தெரியவில்லை. இதனால், எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக பிளாட்பாரத்திலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த ராகவ லாரன்ஸ் இவர்களை அழைத்து சென்றார். இது குறித்து ராகவ லாரன்ஸ் கூறுகையில் “வினோத நோயால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு எந்த மாதிரியான உதவிகள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப உதவி செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.