விமானத்தில்  முதல் முறையாக நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் சிங்கள் ட்ராக் வெளியிடுகிறார்கள்

விமானத்தில்  முதல் முறையாக நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் சிங்கள் ட்ராக் வெளியிடுகிறார்கள்

நடிகர் சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குணீத் மோங்காவின் சிக்யா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் “சூரரைப் போற்று” திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, சுதா கொங்கரா இயக்குகிறார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஜாகி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் ஊர்வசி, மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படம் ஏர்டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைக் கூறும் படமாக உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் பெரும்பகுதி விமானத்தில் நடப்பதால், இதில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றை விமானத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படமென்பதால், பாடலை வெளியிடும் இந்த புதுமையான முயற்சியில் குழந்தைகள் கலந்து கொள்ள வேண்டுமென்று நடிகர் சூர்யா விரும்பினார். ஆகையால், அவரது ‘அகரம்’ அறக்கட்டளையில் பயிலும் குழந்தைகளில் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்யும் 70 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, இன்று 13.02.2020 (வியாழக்கிழமை) மதியம் 01.30 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெறும் பாடல் வெளியீட்டிற்கு குழந்தைகளை அழைத்து செல்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை நிகேத் பொம்மிரெட்டியும், படத்தொகுப்பை சதிஷ் சூர்யாவும் கவனிக்கிறார்கள்.

இப்படத்தின் பாடலை ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் சூர்யா இருவரும் வெளியிடுகிறார்கள்.

ஏப்ரல் மாதம் 2020 அன்று வெளியாகும் இந்த திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் அவர்கள் வாங்கி வெளியிடுகிறார்கள்