வில்லனாக களமிறங்கும் பிரபல இயக்குநர் வெங்கட்பிரபு

சென்னை 28’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திரம், கதாநாயகன் என தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் நிதின் சத்யா. இவர் நடிகர் ஜெய் நடித்த ‘ஜருகண்டி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கினர். தற்போது இவரது தயாரிப்பில் நடிகர் வைபவ் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். இந்நிலையில், இந்தப் படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மங்காத்தா’ அஜித் கதாபாத்திரம் போல் வில்லன் காவல்துறை அதிகாரியாக வெங்கட் பிரபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.