விஷாலுக்கு திருமண அழைப்பிதழ் வைத்த ஆர்யா

அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமானவர் ஆர்யா. பட்டியல், நான் கடவுள், மதராசபட்டினம், வேட்டை, ராஜா ராணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல்வேறு நடிகைகளுடன் ஆர்யா காதல் கிசுகிசுவில் சிக்கினார். இந்நிலையில் ஆர்யாவுக்கு பெண் பார்க்க அவரது குடும்பத்தார் முடிவு செய்தனர். வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா படங்களில் நடித்தவர் சாயிஷா. கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் சாயிஷா ஜோடி சேர்ந்து நடித்தார்.

அப்போது இருவரும் நட்பாக பழகினர். தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்திலும் இருவரும் நடித்து வருகின்றனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும். நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் மார்ச் 10ம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. ஆர்யா – சாயிஷா திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகர் ஆர்யா தனது நெருங்கிய நண்பர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், தனது நண்பரும், நடிகருமான விஷாலை நேரில் சென்று அழைத்திருக்கிறார்.

இதனை புகைப்படம் எடுத்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது இந்தப் புகைப்படம் எனது மனதுக்கு மிகவும்நெருக்கமான ஒன்று. எனது நண்பனின் திருமண அழைப்பிதழ் என் கையில் இருப்பதை நம்பமுடியவில்லை. ஆர்யா – சாயிஷா ஜோடிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.