விஷால் சின்ன நலிந்த தயாரிப்பாளர்களை கண்டுகொள்வதே இல்லை. தேர்தல் வந்தால் ஞாபகம் வரும் -ஆர்.கே சுரேஷ்

 இன்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்ற ரீல் படத்தின் ஆடியோ வெளியீட்டில்
நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் பேச்சில் எப்போதும் அனல் பரக்க
அவர் பேசிய பேச்சும் அப்படித் தான் அனலைக் வீசியது. குறிப்பாக அவர் விஷாலைப் பற்றி கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். “விஷால் நலிந்த சிறு பட தயாரிப்பாளர்களை கண்டுகொள்வதே இல்லை. ஆனால் தேர்தல் நடக்கும் நேரத்தில் ஓட்டுக் கேட்கும் போதுதான் அவருக்கு நலிந்த சிறு பட தயாரிப்பாளர்களின் ஞாபகமே வரும்” என்றார்.

மேலும் நல்ல படங்கள் சரியான பேனரிலும் வெளியாக வேண்டும் அப்போது தான் மக்களிடம் சென்று சேரும். அது மட்டும் அல்லாமல் சேட்டிலைட் டிஜிட்டல்  எஃப் எம் எஸ்  போன்ற வியாபாரங்களுக்கும் அது வழி வகுக்கும்” என்றார். நடிகர் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் ஸ்ரீ முருகா மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ரீல் படத்தை முனுசாமி இயக்கி இருக்கிறார்.