விஷால் பிலிம் பேக்ட்டரி நிறுவனத்தில் பண மோசடி செய்த கணக்காளர் ரம்யாவுக்கு முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்ட்டரி என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை சாலிகிராமத்தில் உள்ளது.

இதில் கணக்காளர் ரம்யா என்ற பெண் கணக்காளராக கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வந்தார்.

இதில் கடந்த 2 ஆண்டுகளாக விஷால் ஃபிலிம் பேக்ட்டரி வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய டிடிஎஸ் ரூபாய் 45 லட்சம் காணாமல் போனதாக கூறப்பட்டது.

இதை கணக்காளர் ரம்யா அரசுக்கு கட்ட வேண்டிய டிடிஎஸ் தொகையை ரம்யாவின் கணவர் வங்கி கணக்கிற்கும், குடும்ப உறுப்பினர் ஒருவருவரின் வங்கி கணக்கிற்கும் அனுப்பியதாக கூறப்பட்டது.

எனவே நிறுவனத்தின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதில் மோசடி செய்த கணக்காளர் ரம்யாவை கைது செய்ய வேண்டும் எனவும் 45 லட்ச ரூபாயை பெற்று தர வேண்டும் என கூறியிருந்தார்.

இதனையடுத்து கணக்காளர் ரம்யா மீது மோசடி போலி ஆவணங்கள் தயாரித்தது உட்பட நான்கு வழக்குகள் பதிவானது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் கணக்காளர்
ரம்யா முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணக்காளர்
ரம்யாவின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.