விஷால் பெயரை உபயோகித்து மோசடி – இயக்குனர் மீது புகார்

இயக்குனர் வடிவுடையான், தயாரிப்பாளரான நரேஷ் கோத்தாரியிடம், விஷாலை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாகவும், அதற்கான கால் சீட் உள்ளதாகவும் கூறி ரூ.47 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் வடிவுடையான் சொன்னபடி படம் எதுவும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த நரேஷ் கோத்தாரி, விஷால் தரப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விஷால் தரப்பினர் வடிவுடையானுக்கு கால் சீட் வழங்கவில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து வடிவுடையான் தன்னை மோசடி செய்துவிட்டதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நரேஷ் கோத்தாரி புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.