விஷ்ணுவிஷால், விக்ராந்த் இணைந்த நடித்த படத்தின் புதிய தகவல்

இயக்குநர் சஞ்சீவ் இயக்கத்தில், நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஷ்ணுவிஷாலின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிறிது காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தின் பின்னணி வேலைகள் தற்போது துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி திரைக்கதை வசனம் எழுதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.