விஸ்வாசம் படத்தின் ஒரிஜினல் ப்ரிண்ட்?
அஜித்தின் விஸ்வாசம் படம் 40 நாட்களை தாண்டி பல திரையரங்குகளில் இன்னமும் திரையிடப்பட்டு கொண்டிருக்கிறது. இப்படத்தின் 25வது நாளை செம்மயாக கொண்டாடிய ரசிகர்கள் வரும் 28ஆம் தேதி விஸ்வாசத்தின் 50வது நாளை அதைவிட பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக பல திரையரங்குகளில் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ள அவர்களுக்கு பேரிடியாக இப்படத்தை Amazon-ல் வெளியிடவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்பின் வெளியிடப்படவுள்ள தேதியையும் அந்நிறுவனம் அறிவித்தது.
here’s a fun social experiment, you give us a movie name that starts with V and ends with M and we will release it on february 25
— Amazon PrimeVideo IN (@PrimeVideoIN) February 19, 2019