‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் எப்படி இருப்பார்?

விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘விஸ்வாசம்’.

இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கதைக்களம் மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு தயாராகி வருகிறது.

முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் டீசர் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே இப்படத்தில் அஜித் இரண்டு விதமாக கேரக்டர்களில் நடிக்கிறார் என்று செய்தி பரவி வருகிறது. அது உண்மையா, இல்லையா என்று உறுதியாகாத நிலையில் விஸ்வாசம் படத்தில் அஜித் எப்படி இருப்பார் என்பது பற்றிய சீக்ரெட்டை உடைத்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்.

“‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் அஜித் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் பிரமாதமாக இருக்கும். படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களில் சிறப்பாக டான்ஸ் ஆடியிருக்கிறார். அதை பலமுறை நானே பார்த்து விட்டேன்.

அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. படம் பொங்கலுக்கு வெளியாகும். ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.