வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’ படம் குறித்த புதிய தகவல்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சரவண ராஜன் இயக்கி வந்த படம் ‘ஆர் கே நகர்’. வைபவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் ஏப்ரல் 12ம் தேதி திரைக்கு வர இருந்தது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் படம் திரையிடும் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக வெங்கட் பிரபு அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.