‘வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு’ படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கப்பட்டார்
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில்
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்க இருந்த படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க ஒப்பந்தமானார். வெகு நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுநாட்களாக துவங்குவதால் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ படத்தைக் கைவிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதிய பரிமானதோடு துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. கூறியது..
வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார்.
தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.
அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!
-சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்
https://twitter.com/vp_offl/status/1159370777331810304?s=19