வெங்கட் பிரபு இயக்கும் இணைய தொடரில் இணையும் பிரபலங்கள்
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு ‘மாநாடு’ என்ற படத்தில் நடிக்கவிருந்தார். இந்த படத்தில் சிம்புவின் ஒத்துழைப்பு இல்லாததால் படம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து வெங்கட் பிரபு இணைய தொடர் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஹாட் ஸ்டார் தளத்துக்காக வெங்கட் பிரபு இயக்கும் இணைய தொடரில் வைபவ் மற்றும் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் வைபவ் உறுதிப்படுத்தியுள்ளார்.