வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப் படத்திற்காக ஒல்லியான சிம்பு – வைரலாகும் புகைப்படம

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து வந்த சிம்பு, குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவரது புதிய தோற்றம் வெளியாகி இருக்கிறது. 

இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம், கடந்த 26ந்தேதி சென்னை அண்ணா நகரில் உள்ள மணமகள் இல்லத்தில் நடைபெற்றது.

இவர்களது திருமண வரவேற்பு 29/04/2019நேற்று மாலை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
தான் காதலித்த பெண் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் குறளரசனும் கடந்த பிப்ரவரி 16-ந்தேதி அவரின் தந்தை முன்னிலையில் இசுலாம் மதத்துக்கு மாறினார்.

உடல் எடையை குறைப்பதற்காக லண்டனுக்கு சென்ற நடிகர் சிம்பு, தன் தம்பியின் திருமணம் மற்றும் வரவேற்பில் கலந்து கொண்டுள்ளார். சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக தனது உடலை குறைத்து வந்தார்.

இந்த நிலையில், குறளரசன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட சிம்புவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.