வெப்சீரிஸையும்தமிழ் ராக்கர்ஸ் – பிரசன்னா புலம்பல்
நடிகர் பிரசன்னா, திரவம் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இந்துஜா, ஜான் விஜய், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். அரவிந்த் கிருஷ்ணா இயக்கி உள்ளார். மூலிகையில் பெட்ரோல் தயாரிக்கும் விஞ்ஞானியாக பிரசன்னா நடித்துள்ளார்.
அறிமுக விழாவில் பேசிய பிரசன்னா, இந்த கால கட்டம் என் வாழ்க்கையின் முக்கியமானது. என்னுடைய ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன். வெப்சீரிஸையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை.
பேசாமல் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் சொல்லி, எல்லா படங்களையும் தமிழ் ராக்கர்ஸிலேயே வெளியிட்டு விட பரிந்துரைக்கலாம் என்றார்.