வெயிட்டான வேடத்தில் மெட்ராஸ் ரித்விகா
பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கலையர சனுக்கு ஜோடியாக நடித்தவர் ரித்விகா. அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதையடுத்து தற்போது பா.ரஞ்சித் தயாரித்துள்ள இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்திலும் நடித்துள்ள ரித்விகா, தனக்கான டப்பிங் பேசியபோது தனது கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்த முக்கியத்துவத்தைப் பார்த்து பெரிய மகிழ்ச்சியடைந்துள்ளார்.
அதையடுத்து அவர் விடுத்துள்ள செய்தியில், அதியன் ஆதிரை இயக்கத்தில் நான் நடித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் தினேஷ், கயல்ஆனந்தியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் ஒரு கேரக்டர் என்று என்னை அழைத்தவர்கள் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரை கொடுத்திருக்கிறார்கள் என்று கூறும் ரித்விகா, மெட்ராஸ் படத்தை விடவும் இந்த படத்தில் பேசப்படும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன் என்று பெருமையாக சொல்லிக்கொண்டு வருகிறார்.