வெற்றிகரமான தோல்வி என்று நான் கூறியதன் அர்த்தம் வேறு: தமிழிசை விளக்கம்!!

5 மாநில தேர்தலில் ‘பாஜக வெற்றிகரமான தோல்வி அடைந்தது’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறியது பலராலும், கிண்டலுக்கு உள்ளானது. இந்நிலையில், தனது அந்த கருத்துக்கு புதிதாக விளக்கம் அளித்துள்ளார் தமிழிசை.

மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியானதில், காங்கிரஸ் கட்சி தன் பெரும்பான்மையை நிரூபித்து தேர்தலில் வெற்றி அடைத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக தோல்வி, வெற்றிகரமான தோல்வி என பதிவிதிருந்தார். இதற்கு பலர் டிவிட்டரில் கிண்டலடித்து மீம்ஸ் போட்டு இருந்தனர்.
இந்நிலையில் “மத்தியபிரதேசத்தில் பாஜக 49 சதவிகித வாக்கு , காங்கிரஸ் 48சதவிகிதம்.இதுதான் வெற்றிகரமான தோல்வி.. ” என்று அதன் விளக்கத்தை ட்விட்டரில் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது கூறியுள்ளார்.

மேலும், ராஜஸ்தானில் 0.5 சதவீதம் மட்டுமே பாஜக விட காங் கூடுதல். மத்தியபிரதேசம் 1 சதவீதம பாஜக தான் கூடுதல்.

மேலும் “சத்தீஸ்கரில் 21 தொகுதிக்கு மேல் 100க்கு குறைவான வாக்குகளில் மட்டுமே காங்.வெற்றி ..அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே. விரைவில் எழுவோம்” இவ்வாறு டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.