வெளிநாட்டு விஜயம்: நடிகர் தளபதி விஜய் வீட்டிலும் கொரோனா ஸ்டிக்கர்?

வெளிநாடு சென்றவர்களின் பட்டியலில் நடிகர் விஜய் பெயர் இருந்ததாக அவரது வீட்டை சோதனை போட்டுள்ளனர் அதிகாரிகள்.

சமீபத்தில் தன ரெய்ட், மாஸ்டர் ஆடியோ லான்ச் முடிந்து ஊடங்களில் விஜய் பெயர் வராமல் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் வந்ததுள்ளது. ஆம், வெளிநாடு சென்றவர்களின் பட்டியலில் நடிகர் விஜய் பெயர் இருந்ததாக சுகாதாரத்துரை அதிகாரிகள் அவர் வீட்டிற்கு ஆய்வு நடத்த சென்றதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆம், கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு நடத்த விஜய்யின் நீலங்கரை வீட்டிற்கு அதிகாரிகள் சென்றதகாவும், ஆனால் கடந்த 6 மாதமாக விஜய் வீட்டில் இருப்பவர்கள் யாரும் வெளிநாடு செல்லவில்லை என தெரிந்ததும் திரும்பி வந்தாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இச்செய்தி குறித்து உண்மை நிலவரம் ஏதும் தெரியவில்லை.