வெள்ளை பூக்கள் – திரை விமர்சனம்

கடத்தல், கொலை, விசாரணை என த்ரில்லர் வகைப்படங்கள் தமிழ் சினிமாவில் வருவது குறைவுதான். அப்படியே வந்தாலும் அவற்றில் பல லாஜிக் மீறல்கள் இருக்கும். 

இந்தப்படத்தில் முன்னணி ஹீரோவை நடிக்க வைக்காமல் கதையின் நாயகனாக ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கி, அதில் நகைச்சுவை நடிகர் விவேக்கை நடிக்க வைத்து இருப்பது  தங்களது வித்தியாசமான முயற்சியை கண்டிப்பாக பாராட்டலாம் அவர்களது உருவாக்கத்தில் முதல் திரைப்படம்தான் என்றாலும் மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் விவேக் இளங்கோவன்

ஒரு சிட்டியில் மர்ம கொலைகளும், நடக்கிறது குற்றவாளியை கண்டுபிடிக்க ஒரு ஓய்வுப் பெற்ற போலீஸ் அதிகாரி செய்யும் துப்பறியும் வேலைகளும் தான் வெள்ளைப் பூக்கள் திரைப்படத்தின் கதை.

ஓய்வுப்பெற்ற போலீஸ்  அதிகாரியான விவேக்கை, கதாநாயகன்னாக நடித்து உள்ளார் வழக்கமான ஹீரோக்கள் நடித்திருந்தால் இது ஹீரோயிசப் படமாக மாறியிருக்கும். ஆனால், அவர்களுக்குப் பதிலாக விவேக்கை நடிக்க வைத்திருப்பதால் இந்த ‘வெள்ளைப் பூக்கள்’ படத்திற்கு வேறு ஒரு நிறம் கிடைத்திருக்கிறது. 

தனது அனுபவ நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒரு இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விவேக். வழக்கமான அவருடைய நடிப்பும் சாயலும் படத்தில் எங்குமே இல்லை. விவேக் இதுவரை கதாநாயகனாக நடித்த ஒரு சில படங்களில் இந்தப் படமும், கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கிறது. 

இந்த நிலையில்தான் ஒரு போலீஸ் அதிகாரியான நண்பர் விவேக்கை அமெரிக்கா சென்றுவர கட்டாயப்படுத்துகிறார். அந்த கட்டாயத்தின் பேரில், அமெரிக்காவின் சியாட்டல் நகருக்கு புறப்பட்டு செல்கிறார் விவேக். 

அமெரிக்காவில் வசிக்கும் விவேக்கின் மகன் தேவ், அந்நாட்டைச் சேர்ந்த ஆலிஸ் எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபமடையும் தந்தை விவேக்  பல ஆண்டுகளாக மகன் மேல் உள்ள கோபத்தில் பேசாமல் இருந்து வருகிறார். விவேக் மகனுடன்சமாதானம் ஆனாலும், மருமகள் மீது கோபத்தை தொடர்கிறார் விவேக். ஆலிஸ் வலிய வந்து பேசினாலும், அவருடன் பேசாமல் தவிர்த்து விட்டு செல்கிறார் விவேக்.

இதற்கிடையே அதே ஊரில் மகளுடன் தங்கியிருக்கும் சார்லியை சந்திக்கிறார். அவருடன் விவேக்கிற்கு தமிழர் என்ற உடன் நட்பு ஏற்படுகிறது. இருவரும் வாக்கிங் என்ற பெயரில் ஊரைச் சுற்றி  திரிகிறார்கள். இந்நிலையில், விவேக்கின் பக்கத்து வீட்டு பெண் மோனா மர்மமான முறையில் கடத்தி கொல்லபடுகிறார். இந்த விவகாரத்தில் விவேக் தானாக வந்து தலையிட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். இது அவரது மகனுக்கும் அந்த ஊர் போலிஸ் அதிகாரிக்கும் மற்றவர்களுக்கும் பிடிக்கவில்லை.

இருப்பினும் விவேக்கின் துப்பறியும் மூளை அவரை அந்த கொலை.கடத்தல் யார் குற்றவாளிகள் என்பதை பற்றியே சிந்திக்க வைக்கிறது. மோனா போலவே வேறொரு சிறுவனும் கடத்தப்படுகிறான். பின்னர் விவேக்கின் மகனே கடத்தப்படுகிறார். இவர்களை கடத்தியது யார்? விவேக் துப்பறியும் மூளையை வைத்து எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் மிதிகதை.

விவேக்கிற்கு அடுத்தப்படியாக படத்தில் நமக்கு நன்றாக தெரிந்த முகம் சார்லி. படம் முழுவதும் விவேக்குடனேயே வருகிறார். பழைய படங்களில் சிறு வயதில் அவர்கள் என்ன செய்தார்களோ, அதேவேலையை முதிய பருவத்தில் செய்திருக்கிறார்கள். குற்றவாளியை கண்டுபிடிக்கிறேன் என கிளம்பி இவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி, செம .

பூஜா தேவரியாவுக்கு படத்தில் பெரிய வேலை எதுவும் இல்லை. ஆனால் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார். ஒரே காட்சி தான் என்றாலும், மிரட்டி இருக்கிறார். விவேக்கின் மகனாக நடித்துள்ள தேவ் தமிழுக்கு நல்ல அறிமுகம். அதேபோல் அவரது மனைவியாக நடித்துள்ள பேய்ஜ் ஹெண்டர்சனும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

விவேக், சார்லி சம்மந்தப்பட்ட காட்சிகள் சீரியஸ் படத்தை ஜாலியாக மாற்றிவிடுகிறது. இதனால் ஒரு திரில்லர் படம் ரசிகர்களிடையே ஏற்படுத்த வேண்டிய பதட்டம் இதில் மிஸ்ஸிங். க்ளைமாக்ஸ் சர்ப்ரைசிங்காக இருந்தாலும், அதுமட்டும் தான் படம் என்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

திரில்லர் படத்திற்கு ஏற்ற வகையில், மிகையில்லாத பின்னணி இசையை தந்திருக்கிறார் ராம்கோபால் கிருஷ்ணராஜு. ஒரே பாடல் தான் என்றாலும், ராப் இசையில் கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது.

ஜெரால்ட் பீட்டரின் ஒளிப்பதிவு, படத்தை பிரஷ்ஷாக காட்டுகிறது. படம் போராடிக்காத வகையில் எடிட் செய்திருக்கிறார் பிரவீன் கே.எல். படம் சுவாரஸ்யமாக நகர்வதற்கு பிரவீனின் எடிட்டிங்கும் ஒரு காரணம்

பெரிய நட்சத்திர பட்டாளம் இல்லாத இந்த படத்தில், பொறுப்பை உணர்ந்து, முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார் விவேக். ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை விவேக்கின் ஆட்சி தான். வயதான போலீஸ் அதிகாரி ரோலுக்கு, நன்றாகவே பொருந்துகிறார். தனது இயல்பான ஜாலி நடிப்பால், சீரியஸ் காட்சியையும் காமெடியாக்கிவிடுகிறார்

அமெரிக்காவில் வாழும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் இந்த படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார்கள். அதனாலேயே படத்தின் மேக்கிங் ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை தருகிறது. சீரியசான திரில்லர் படத்தை, மிக எளிமையான திரைக்கதையில், சுவாரஸ்யமாக தந்திருக்கிறார் இயக்குனர் விவேக் இளங்கோவன்.

சியாட்டல், ஒடிசி, வெளிநாட்டு நடிகர்கள், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் என புதிய உணர்வை தருகிறது வெள்ளைப் பூக்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் நல்லதொரு கருத்தை சொல்லி இருக்கிறார்கள்

 சியாட்டில் நகரம், அதன் அமைதியான தெருக்கள் ஆகிய கதைக் களமே படத்திற்கு கூடுதல் பலத்தைத் தருகிறது. ஜெரால்ட் பீட்டர் ஒளிப்பதிவு ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுக்கிறது. ராம்கோபால் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் படத்தில். பின்னணி இசையில் காட்சியின் தாக்கத்தை கூடுதலாக்கியிருக்கிறார்.

முதல் முயற்சி என்பதால் சில  குறைகளை பெரிய மனதுடன் மன்னிக்கலாம். நம் ஊர் படங்களையே பார்த்துப் போரடிக்கும் நமக்கு இப்படி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் வேறு ஒரு களத்தில் படங்களைத் தருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்

 வெள்ளைப் பூக்கள்… ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு தமிழ் படம்!