வேன் மீது ஏறி நின்று மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ தளபதி விஜய்
மாஸ்டர்’ திரைப்பட சூட்டிங்கில் தளபதி விஜய் நடித்துக் கொண்டிருந்தபோதே வருமானத் வரித்துறையினர் விஜய்யை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதனால் 2 நாட்களாக சூட்டிங் தடைப்பட்டது.
விஜய்யிடம் இருந்து ரொக்கமாக பணம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் அவரிடம் உள்ள சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டது.
இதனையடுத்து மீண்டும் மாஸ்டர் சூட்டிங்கில் கலந்துக் கொண்டார் விஜய்.
ஆனால் பாதுகாக்கப்பட்ட இடமான நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கூடாது என பாஜக.வினர் போராட்டம் நடத்தினர்.
இதனையறிந்த விஜய் ரசிகர்கள் அங்கு திரண்டனர்.
இதனால் இரு தரப்பும் மோதல் உருவாகவே பாஜகவினரை சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதனால் மாஸ்டர் சூட்டிங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியிலிருந்து காரில் வந்த விஜய் சூட்டிங்கில் கலந்துக் கொண்டார்.
என்.எல்.சி. 2-வது சுரங்க நுழைவாயில் பகுதி வழியாக அவரது கார் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றது.
என்.எல்.சி. தொழிலாளர்கள் மற்றும் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த படப்பிடிப்பு வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த படப்பிடிப்புக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும். மந்தாரக்குப்பம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இந்த நிலையில் விஜய்யை காண என்.எல்.சி முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
எனவே படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த அங்குள்ள வேன் மீது ஏறி தன் ரசிகர்களை பார்த்து கை அசைத்து செல்ஃபி எடுத்தார் விஜய்.