ஸ்டண்ட் இயக்குநர் சில்வாவுக்கு கிடைத்த பிரபல விருது.
பிரபல ஸ்டண்ட் இயக்குநர் சில்வா, தமிழ் சினிமாவில் அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘லூசிஃபயர்’ படத்திற்கு ஸ்டண்ட் இயக்குநராக பணிபுரிந்திருந்தார்.இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘லூசிஃபயர்’ படத்திற்காக 2019ம் ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குனருக்கான மனோரமா விருது கிடைத்துள்ளது. இந்த விருது எனக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் விருது வழங்கிய அனைவருக்கும்் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
https://twitter.com/silvastunt/status/1125078804198711296?s=19