ஸ்டார் வார்ஸ்’ ஹாலிவுட் நடிகர் பீட்டர் மேஹ்யூ காலமானார்

‘அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் 74 வயதாகும் பீட்டர் மேஹ்யூ திடீரென்று மரணம் அடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

ஸ்டார் வார்ஸ் ஹாலிவுட் படங்களில் பக்காவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பீட்டர் மேஹ்யூ. டெர்ரர், ஸ்டார் டூர்ஸ் யெஸ்டர்டே வாஸ் டை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் 74 வயதாகும் பீட்டர் மேஹ்யூ திடீரென்று மரணம் அடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

அதன்பிறகு 1977-ல் திரைக்கு வந்து உலகம் முழுவதும் வசூல் குவித்த ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தில் துணை விமானியாகவும் ஹான் சோலோவின் நண்பராகவும் நடித்து பிரபலமானார்

மரணத்துக்கான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை. பீட்டர் மேஹ்யூ மறைவுக்கு அவரது ரசிகர்களும் ஹாலிவுட் பட உலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பீட்டர் மேஹ்யூ இங்கிலாந்தில் பிறந்தவர். இவரது தந்தை போலீஸ்காரராக பணியாற்றினார்.

லண்டனில் உள்ள மருத்துவமனையில் பீட்டர் மேஹ்யூ உதவியாளராக வேலை பார்த்தார். அவரை பார்த்த தயாரிப்பாளர் சார்லஸ் ஷனீர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். சிந்துபாத் அண்ட் தி ஐ ஆப் தி டைகர் படத்தில் முதன் முதலாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.