ஸ்பானிஷ்  ரீமேக்கில் படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா

பாகுபலி படங்களுக்குப் பிறகு பாகமதி படத்தில் மட்டுமே நடித்தார் அனுஷ்கா. அதன் பின் இப்போதுதான் சைலன்ஸ் படத்தில் மாதவனுடன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு அனுஷ்கா 2010ல் வெளிவந்த ஸ்பானிஷ் படமான ஜுலையாஸ் ஐஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

ஒரு மர்மான தற்கொலை ஒன்றைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் அந்தப் படத்தின் கதை. அப்படத்தை தமிழ், தெலுங்கில் கபீர் லால் இயக்க உள்ளாராம். ஹிந்தியில் முன்னணி ஹீரோக்கள் நடித்த பல படங்களை இயக்கியவர் கபீர் லால். சைலன்ஸ் படத்துடன் இந்தப் படத்தில் அனுஷ்கா நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இருந்தாலும் சமீப காலங்களில் அனுஷ்கா உடனடியாக எந்தப் புதுப்பட வாய்ப்புகளையும் உடனே நடிக்க சம்மதிப்பதில்லை. எனவே, இந்தப் படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே அது நடக்கும் என எதிர்பார்க்கலாம்