ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘ராக்கி’ படத்தை திரையிடும் தேதி அறிவிப்பு

 இயக்குநர் கே.சி.பொகடியா இயக்கத்தில், ஸ்ரீகாந்த், ஈஷான்யா மகேஸ்வரி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ராக்கி’. மேலும் இந்த படத்தில் ராக்கி என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்நிலையில் ஒரு நாய் பழிவாங்கும் கதையை மையமாக கொண்ட இந்த திரில்லர் படத்தின் திரையிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 12ம் தேதி இந்த படம் திரையிடப்படுகிறது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.