ஸ்ரீதேவி கேரக்டரில் பிரியா வாரியர்..? அதிர்ச்சியில் அஜித் பட தயாரிப்பாளர்

ஒரே கண்சிமிட்டல் அசைவில் இந்தியாவையே கிறங்கடித்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவர் தற்போது ஹிந்தியில் உருவாகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில் பிரியா வாரியர் தன்னை ஸ்ரீதேவி என்று அறிமுகப்படுத்தும் காட்சி உள்ளது.

மேலும் அவர் தம் அடிப்பதும் மது அருந்தும காட்சிகளும் உள்ளது.

இறுதியாக குளியல் தொட்டியில் ஒரு பெண் பிணமாக கிடப்பதுபோல் டிரெய்லர் முடிகிறது.

நடிகை ஸ்ரீதேவி மரணம் அடையும் போது நிஜவாழ்க்கையில் நடந்தவைதான் இது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் படக்குழுவினருக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார்.

படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என கோரியுள்ள நிலையில் படக்குழுவினர் மறுத்து விட்டனர்.

இப்பட இயக்குனர் பிரசாந்த் மாம்புலி இது குறித்து பேசியுள்ளதாவது…

“ஒரு நடிகை லண்டனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தால் அவருக்கு என்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது கதை.

இப்படத்தை பார்த்த பிறகு ஸ்ரீதேவி கதையா இல்லையா என்பதை முடிவு செய்யட்டும். தலைப்பை மாற்ற மாட்டேன்” என்றார்.

இதனால் படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடர போனிகபூர் முடிவு செய்திருக்கிறாராம்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இப்படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்தவர் போனிகபூர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.