ஸ்ரீ ஷீரடி சாய் மூவீஸ் தயாரிப்பில் இயக்குனர் ஹேமம்பர் ஜஸ்தி இயக்கத்தில் உருவாகும் ஒரு யதார்த்தமான காதல் கதை

ஸ்ரீ ஷீரடி சாய் மூவீஸ் சார்பாக எம் ராஜசேகர் ரெட்டி, ஜீவன் கோத்தா இணைந்து தயாரிக்க, இயக்குனர் ஹேமம்பர் ஜஸ்தி இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்த ‘கேர் ஆப் காஞ்சேரபள்ளம்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக, சில மாறுதல்களுடன் ஒரு யதார்த்தமான காதல் கதை உருவாகிறது.

இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு கதாபாத்திரமும், நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும், எதிர்கொள்ளும் மனிதர்களையும், சம்பவங்களையும் மனதில் கொண்டு உருவாகி இருப்பதால், அனைத்து ரசிகர்களும் தம்முடைய வாழ்வில் ஏதோ ஒரு நிகழ்வுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் விதத்தில் ஒரு ஜனரஞ்சகமான கதைகளமாக அமைந்துள்ளது.

இப்படத்திற்கு ஸ்வீகர் அகஸ்தி இசை அமைக்க, குணசேகரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மகாவெங்கடேஷ் கதை எழுத, நீலன் வசனம் எழுத, கபிலன் பாடல்களை எழுத, காஸ்ட்யூம்ஸ் சாய் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான பூஜை 11th ஜூலை நடைபெற்ற நிலையில், நட்சத்திரங்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஹேமம்பர் ஜஸ்தி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, ஸ்ரீ ஷீரடி சாய்
மூவீஸ் தயாரிக்க, டெட்லபள்ளி மதன் நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறார்.