ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய தமிழ் படத்தின் தகவல

தமிழ் சினிமாவில் ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன். அதன்பிறகு 8 ஆண்டுகளில் 6 தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் கடந்த 2 ஆண்டுகளாக எந்த படமும் நடிக்காமல் இருந்து வந்தார். இதனிடையே இயக்குநர் எஸ்.பி.ஜனாதனன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தில், நாயகியாக நடிக்க ஸ்ருதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.