ஹரிஷ் கல்யாணை இயக்கும் பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி

தமிழ் திரைப்பட உலகில் உள்ள இளைய நடிகர்களில் மிக முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு ரசிகைகள் பலர் உள்ளனர்.

விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஹரிஷ் கல்யாண் பங்கேற்று இருந்தார்.

மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்து பிரபலமானார்.

இந்த நிலையில் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மூவிசாரே தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில், இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் இப்படம் வெளியாகும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.