ஹர்ஷிதா ஷெட்டியை மணக்கும் கிரிக்கெட் வீர்ர் மணிஷ் பாண்டே

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே.

பெங்களூரைச் சேர்ந்த இவர், இந்தியாவுக்காக 23 ஒரு நாள் போட்டிகளிலும் 31 டி-20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

இப்போது நடிகை ஹர்ஷிதா ஷெட்டியை மணக்க இருக்கிறாராம்.

தமிழில் ’உதயம் என்.ஹெச். 4’, ’ஒரு கன்னியும் மூணு களவானிகளும்’, ’இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஹர்ஷிதா.

இவர்கள் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். அதை இருவரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி இவர்கள் திருமணம் மும்பையில் நடக்கிறது என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!