ஹாலிவுட் திரைப்படமான ‘டிராப் சிட்டி’ திரைப்படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

தென்னிந்திய திரைப்பட உலகில் மிகவும் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் ஹாலிவுட் திரைப்படத்தின் டீசரை இன்று வெளியிட உள்ளார்.

இசையமைப்பாளர் பாடகர் நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.

இவர் ‘டிராப் சிட்டி’ எனும் திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார்.

ரிக்கி ப்ரூச்சல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை கைபா எனும் ஹாலிவுட் திரைப்பட நிறுவனம் சார்பாக ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் டெல் கணேசன் தயாரித்துள்ளார்.

இந்த ‘டிராப் சிட்டி’ திரைப்படத்தில் நமது தமிழ் திரைப்பட நடிகர் மாவீரன்
நெப்போலியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏழ்மையில் வாடும் ஒரு ராப்  பாடகனின் கதைதான் டிராப் சிட்டி திரைப்படம்.

சுவாரசியமான கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் அமெரிக்காவில் உள்ள நேஷவில் என்னுமிடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பு முடிந்து திரைப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தின் டீசரை வெளியிட உள்ளார்.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 11) தேதி மாலை 5.30 மணிக்கு இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.