ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் அவர்களுடைய அனைத்து திரைப்படமும் எனக்குப் பிடிக்கும் – நடிகர் ஆர்யா.

டெர்மினேட்டர்’ படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய ‘டெர்மினேட்டர்’ படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் அர்னால்ட். இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டு பேசினார். அப்போது, “டெர்மினேட்டர் உலகம் முழுக்க பேமஸ். அவருடைய டிரைலரை நான் வெளியிடுவது எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் அவருடைய தீவீர ரசிகன். அவருடைய அனைத்து படமும் எனக்குப் பிடிக்கும்” என்று கூறினார்.

‘டெர்மினேட்டர் டார்க் பெட்’ டிரைலர் 👇