ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிப்பேன் – நடிகர் நெப்போலியன்..! அவரே கூறிய தகவல்

தமிழ் படங்களில் பிரபல வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்து வந்தவர் நடிகர் நெப்போலியன். பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சினிமாவில் இருந்து சிறிது ஒதுங்கி அரசியலில் எம்எல்ஏ, எம்பி. மத்திய அமைச்சர் என சினிமாவிலும் அரசியலிலும் பன்முக கலைஞனாக இருந்தவர் நடிகர் நெப்போலியன்.

இந்நிலையில் ஹாலிவுட்டில் உருவாகும்  கிறிஸ்துமஸ் கூப்பன் என்ற படத்தில் நடித்துள்ள நடிகர் நெப்போலியன் அப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசினார்.

அவர் பேசுகையில், நான் பாரதிராஜாவின் புதுநெல்லு புது நாத்து படத்தில் வில்லனாக அறிமுகமானேன். 27 வயதில் அந்த படத்தில் 60 வயது முதியவராக நடித்தேன். பின்னர் பல படங்களில் வில்லனாக நடித்து, அதையடுத்து கதாநாயகனாக நடித்தேன். பின்னர் பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டேன், எம்எல்ஏ, எம்பி. மத்திய அமைச்சர் என்று வளர்ந்தேன். சமீபகாலமாக அரசியலை விட்டு முற்றிலுமாக விலகி அமெரிக்காவில் செட்டிலாகி விட்டேன்

இருப்பினும் தமிழ் படங்கள் மட்டுமின்றி ஆங்கில படங்களிலும் தற்போது நடித்து வருகிறேன். அந்த வகையில், முத்துராமலிங்கம், சீமராஜா படங்களைத் தொடர்ந்தும் சில படங்களில் நடித்து வருகிறேன். அதோடு, ஹாலிவுட்டில் டெவில்ஸ் நைட், கிறிஸ்துமஸ் கூப்பான் ஆகிய படங்களில் நடிக்கிறேன்.

இந்த கிறிஸ்மஸ் கூப்பன் படத்தில் ஒரு அழுத்தமான ரோலில் நடிக்கிறேன். முதல் ஹாலிவுட் படத்தில் ஹீரோயினியுடன் ஒரு காட்சியில்கூட நடிக்கவில்லை. ஆனால் இந்த படத்தில் ஹீரோயினியுடன் நடித்திருக்கிறேன். அடுத்த படத்தில் ஹீரோவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கூறினார்.

1981இல் காலேஜில் படிக்கும்போது தேடி நடிக்க வாய்ப்பு வந்தது. 1991இல் எனது குரு பாரதிராஜா அவர்களின்  புது நெல்லு புது நாத்து படத்தில் வில்லனாக நடித்தேன் 2001இல் கதாநாயகனாக நடித்தேன் 2011இல் அரசியலில் ஈடுபட்டு எம்எல்ஏ எம்பி மத்திய அமைச்சர் ஆகிய பதவி வகித்தேன். 2021 இல் ஹாலிவுட் படத்தின் கதாநாயகனாகவும் நடிப்பேன் என்று நடிகர் நெப்போலியன் தெரிவித்தார்