ஹீரோ’ படத்திற்காக ரயிலில் பயணிக்கும் சிவகார்த்திகேயன்
‘நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ‘எஸ்.கே 14’ என்ற படத்திலும், ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் ‘ஹீரோ’ படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே, ‘ஹீரோ’ படத்தின் மூலம் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும் அர்ஜுன், இவானா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயிலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்கான புகைப்படங்களை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/Psmithran/status/1123606165122719745?s=19