க / பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்.ரேட்டிங் – 4./5


நடிப்பு – விஜய் சேதுபதி, ஜஸ்வர்யா ராஜேஷ், முனீஸ்காந்த், வேல் ராமமூர்த்தி பாவணி, ரங்கராஜ் பாண்டே, சரவணசக்தி, மோகன் ராம், சுப்பிரமணிய சிவா, அருண்ராஜா காமராஜ் மற்றும் பலர்.

தயாரிப்பு – கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ். கோட்டாபாடி ஜே ராஜேஷ்

இயக்கம் – விருமாண்டி

ஒளிப்பதிவு – என்.கே.ஏகாம்பரம்

எடிட்டிங் – சிவாநந்நீஸ்வரன்

இசை – ஜிப்ரான்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

திரைப்படம் வெளியான தேதி – 02 அக்டோபர் 2020 (ஓடிடி) (ஜீ பிளக்ஸ்)

ரேட்டிங் – 4./5

 

திரையரங்குகள் திறக்கப்படாத சூழ்நிலையில் பல திரைப்படங்கள் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன.

அதன்படி நடிகர் விஜய் சேதுபதி ஜஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கிய கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்.தயாரிப்பில் க/பெ ரணசிங்கம் திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் (ஜீ பிளக்ஸ்) வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் (Pay per view) என்ற கட்டண முறையில் ஜீ ப்ளெக்ஸில் 02 அக்டோபர் 2020 அன்று வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் விருமாண்டி சமூக பிரச்சினைகள் ஊர் உள்ள மக்கள் பிரச்சினையுடன் ஒரு குடும்ப தலைவியின் பிரச்சினையையும் ஒன்று சேர்த்து இணைத்து ஒரு சென்டிமென்டான திரைப்படமாக இந்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விருமாண்டி.

திரைப்பட உலகில் வியாபாரத்திற்காக கதாநாயகர்களை மட்டுமே நம்பி அதிகமான திரைப்படங்கள் வருவது வழக்கம்.

ஆனால், இந்த திரைப்படத்தில் கதையை கதாநாயகியை மட்டுமே நம்பி எடுத்ததற்காக இயக்குநரை பாராட்டலாம்.

மேலும் திரைப்படத்தில் வரும் வசனங்களின் நமது நாட்டில் இன்றைய சூழ்நிலை அரசியல் நிலவரங்களையும் அரசாங்க அதிகாரிகளை பற்றியும் அழுத்தமாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முன்னால் வந்து குரல் கொடுக்கும் வழக்கமான கதாநாயகன் கதாபாத்திரம் தான் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு.

கதாநாயகன் சொந்த மண்ணில் உள்ள மக்களின் சில முக்கிய பிரச்சினைகளை சமூக அக்கறையுடன் திரைப்படங்கள் கதையாக அமைத்து வெளிவரும் திரைப்படங்கள் மிக மிகக் குறைவே 90களில் அப்படிப்பட்ட திரைப்படங்களை ஓரளவிற்காவது பார்க்க முடிந்தது.

ஆனால், கடந்த இருபது வருடங்களாக அப்படிப்பட்ட திரைப்படங்கள் வருடத்திற்கு ஒன்று வந்தாலே அதிகம் என்ற நிலையே இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர் பிரச்சினையால் தலை விரித்து தள்ளாடும் ஒரு கிராமத்தில் இருப்பவர்தான் கதாநாயகன் விஜய் சேதுபதி அடிக்கடி மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர்.

அப்படி இருக்கும் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷுடன் காதல் மலர்ந்து 144 போடப்பட்ட நிலையில் திருமணம் இரவில் நடைபெறுகிறது.

இருவரின் திருமணத்திற்கு பிறகு வெளிநாடு சென்று வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி.

துபாய்யில் வேலைக்கு செல்லும் கதாநாயகன் விஜய் சேதுபதி அங்கு பல வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்.

துபாயில் வேலை சென்ற இடத்தில் ஆயில் கம்பெனி நடந்த விபத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதி ரணசிங்கம் இறந்துவிட்டார் என்ற தகவல் வருகிறது.

தனது கணவர் கதாநாயகன் விஜய் சேதுபதி ரணசிங்கத்தின் உடலை அவரது சொந்த ஊருக்கு துபாயில் இருந்து கொண்டு வர முடியாமல் தவிக்கிறார் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஒரு மாதம் இரண்டு மாதமல்ல பத்து மாதங்களாக தனது கணவர் உடலைகொண்டு வருவதற்காக போராடுகிறார்.

பல போராட்டங்களுக்கு பிறகு அவருக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

அங்கு நடந்த விபத்தில் உயிரிழந்த கணவர் ரணசிங்கத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர முடியாத சூழ்நிலையில் இருக்கும் கணவரின் உடலை எத்தனை ரணம் வந்தாலும் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் விடாது போராடி மீட்டெடுக்கும் சிங்க பெண்ணாக இருக்கிறார் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

ரங்கராஜ் பாண்டே மட்டும்தான் அதிக நேரம்  வருகிறார். மாவட்ட கலெக்டர் கதாபாத்திரத்தில் மிக பொருத்தமாகவே நடித்திருக்கிறார்.

அவரைக் காப்பாற்ற ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் அவர் படும் அவலங்கள், பல பெண்களின் கண்ணீர் கதைகளை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு என்ன நடந்தது? என்பதை காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் கூட்டி சிறந்த திரைப்படத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உதவும் கதாபாத்திரத்தில் வரும் ஜி.வி பிரகாஷின் தங்கை பவானி, ரங்கராஜ் பாண்டே, அருண்ராஜ் காமராஜா போன்றோரின் நடிப்பும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தின் முதல் பாதி கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் யதார்த்தமான நடிப்பு கதாநாயகன் விஜய்சேதுபதியின் நக்கல், நையாண்டி என சூப்பரோ சூப்பர்….

கிராமத்திலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் வெளிநாட்டில் இறந்த தனது கணவன்மார்களை இந்தியா கொண்டு வர ஒவ்வொரு மனைவிகள் படும் வேதனை நன்றாக பதிவு செய்துள்ளார் இயக்குநர் விருமாண்டி.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன் இறந்து விட்டால் அவரின் உடலை நம் நாட்டுக்கு கொண்டுவர எந்த அளவுக்கு வேதனை கஷ்டம் நாம் பட வேண்டும் என்ற உண்மையை மிக அழகாக பதிவு செய்கிறார்…

ஒரு மிக சிறந்த படைப்பு உணர்வும் உணர்ச்சி மிகுந்த படைப்பு நிச்சயமாக ஒரு விருமாண்டி மிக சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்.

ஜிப்ரான் பின்னணி இசை காட்சிகளின் அழுத்தத்தையும் மனதில் உள்ள ரணத்தையும் கூட்டுகிறது.

ஒரு பாடலாவது ஹிட்டாக்கியிருந்தால் திரைப்படத்திற்கு பக்க பலமாக இருந்திருக்கும்.

ராமநாதபுரத்தில் உள்ள வறட்சியை சில காட்சிகளில் தெளிவாகப் பதிவு செய்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.

படத்தொகுப்பாளர் சிவாநாந்தீஸ்வரன் பல காட்சிகளில் கை வைத்திருக்கலாம்

இந்த திரைப்படத்தின் பலம் கதாநாயகன் விஜய் சேதுபதி கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் வெற்றி மகுடதில் மீண்டும் ஒரு சித்திரம் நிச்சயமாக கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது உண்டு நீங்கள் கொடுக்கும் 199 ரூபாய் இந்த படதுக்கு நிச்சயம் உண்மையாகவும் உலகதரத்துக்கு ஒரு படமாகவும் இருக்கு மனதை குறிப்பாக கிளைமாக்ஸ் மனதை நெகிழவைக்கும் ரொம்ப நாட்கள் பிறகு பிரம்மிக்கவைக்கும் ஒரு காவியம்.

இந்த திரைப்படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் அருமை பழைய திரைப்படம் ஒன்றில் பி எஸ வீரப்பா அவர்கள் ஒரு வசனம் பேசியிருப்பார் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று ஒரு வசனம் இன்று வரை மக்களின் மனதில் நின்று நின்று கொண்டிருப்பது போல் இந்த வசனம் திரைப்படத்தின் வசனமும் காலாகலத்திற்கும் மக்கள் மனதில் நிறைந்து இருக்கும்

இந்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் திரையரங்குகளில் வந்திருந்தாள் ரசிகர்களுக்கு மனமும் ரணமாகி இருக்கும்.