பிரபல தயாரிப்பாளருக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் ரஜினிகாந்த்!
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கதாசிரியர் கலைஞானத்தின் 75 ஆண்டுகால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் வகையிலும், அவரது 90-வது பிறந்தநாளையொட்டியும் தமிழர் கலை, இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது. அப்போது கலைஞானத்துக்கு தனது சொந்த செலவில் வீடு வாங்கித் தருவதாக ரஜினிகாந்த் கூறினார். இந்நிலையில், ரூ.45 லட்சம் மதிப்பிலான வீட்டை கலைஞானம் குடும்பத்தாருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.