விஜய் சேதுபதி நடிப்பில்  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை  மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்  கண்டு ரசித்து படக்குழுவினரை பெரிதும் பாராட்டினர்.!!

விஜய் சேதுபதி நடிப்பில்  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை  மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்  கண்டு ரசித்து படக்குழுவினரை பெரிதும் பாராட்டினர்.!!

சென்னை 18 மே 2023 எஸ். இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

சென்னையில் இன்று நடைபெற்ற சிறப்பு காட்சியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் திரு நல்லகண்ணு மற்றும் திரு மகேந்திரன், மற்றும் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் கண்டு ரசித்தனர்.

சிறப்பு காட்சிக்கு பின்னர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து திரு நல்லகண்ணு, திரு மகேந்திரன் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை அவர்கள் பெரிதும் பாராட்டினர்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தின் டிரைலர் ஏற்கனவே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், திரைப்படம் மே 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Yaadhum Oore Yaavarum Kelir – Official Trailer | Vijay Sethupathi | Megha Akash | Venkata Krishna R